IPL Match 66 – இமாலய இலக்கை இலகுவாக வென்ற டெல்லி

ஐ.பி.எல். தொடரின் 66வது லீக் போட்டி ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயஸ் அய்யர் அரை சதம் கடந்து 53 ரன்னில் அவுட்டானார்.
இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. கே.எல்.ராகுல் 35 ரன்னும், டூ பிளசிஸ் 23 ரன்னும் எடுத்தனர்.
கருண் நாயர் 27 பந்தில் 44 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.சமீர் ரிஸ்வி 22 பந்தில் அரை சதம் கடந்தார்.
இறுதியில், டெல்லி அணி 19.3 ஓவரில் 208 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
(Visited 1 times, 1 visits today)