IPL Match 65 – பெங்களூரு அணிக்கு இமாலய வெற்றி இலக்கு

ஐபிஎல் 2025 சீசனின் 65ஆவது போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இன்றைய போட்டியில் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் இம்பேக்ட் வீரராக விளையாடுகிறார். இதனால் ஜித்தேஷ் சர்மா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். டாஸ் வென்ற ஜித்தேஷ் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அடுத்து வந்த இஷான் கிஷன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேவேளையில் மறுபக்கம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழந்தன.
17 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்திருந்தது. 18ஆவது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அத்துடன் ஐதராபாத் 203 ரன்கள் குவித்தது.
கடைசி ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 6 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்துள்ளது.
இஷான் கிஷன் 48 பந்தில் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.