செய்தி

வெள்ளவத்தையில் சிக்கிய துப்பாக்கி – முன்னாள் அமைச்சர் அதிரடியாக கைது

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தை – ஹெவ்லொக் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவரிடம் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட T56 ரக துப்பாக்கி ஒன்று நேற்று முன் தினம் கைப்பற்றப்பட்டது.

இதுதொடர்பாக கைதான இரண்டு பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இந்த துப்பாக்கி அநுராதபுரத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வந்தநிலையில், இன்று பம்பலபிட்டிய பகுதியில் வைத்து துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!