இந்திய U19 அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமனம்.!

ஜூன் 24 முதல் தொடங்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான U-19 இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
இந்த அணியில் 2 ஐபிஎல் நட்சத்திரங்களான ஆயுஷ் மத்ரே மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரின் அதிர்ஷ்டம் பிரகாசித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆயுஷ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆயுஷ் மாத்ரே தலைமையிலான அணியில் வைபவ் சூரியவன்ஷி, அபிக்யான் குண்டு, ஹென்த்ரா படேல், ஹர்வன்ஷ் சிங் உள்ளிட்ட 16 பேர் இடம்பிடித்துள்ளனர்.
ஜூன் 24 ஆம் தேதி தொடங்கும் இந்த சுற்றுப்பயணத்தில் 50 ஓவர் பயிற்சி போட்டியும், அதைத் தொடர்ந்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும், இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்ட அணிக்கு எதிரான இரண்டு நான்கு நாள் போட்டிகளும் அடங்கும்.
ஆயுஷ் மத்ரே (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, மௌல்யராஜ்சிங் சாவ்தா, ராகுல் குமார், அபிக்யான் குண்டு (துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஹர்வன்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்), ஆர்எஸ் ஆம்ப்ரிஸ், கனிஷ்க் சவுகான், ஹென்ஜிவ் படேல், ஹென்ஜிவ் படேல், கிலான் படேல் ராகவேந்திரா, முகமது எனன், ஆதித்யா ராணா, அன்மோல்ஜித் சிங்.