அமெரிக்கா துப்பாக்கிச் சூடு – விரைவில் திருமணம் செய்ய தயாரான காதலர்கள் மரணம்

வொஷிங்டன் நகரில் இஸ்ரேலியத் தூதரக ஊழியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
யாரோன் லிஸ்சின்ஸ்கி – சாரா மில்கிராம் என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவிலுள்ள இஸ்ரேலியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இருவரும் காதலித்து வந்ததாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருந்ததாகவும் அவர்கள் ‘வாழ்வின் முக்கிய கட்டத்தில்’ இருந்ததாகக் கூறி இஸ்ரேலியத் தூதரகம் தெரிவித்துள்ளா்.
யாரோன் இந்த வாரம்தான் தமது காதலி சாராவுக்குக் கொடுப்பதற்காக மோதிரம் ஒன்றை வாங்கியதும் தெரியவந்துள்ளது.
அவர்கள் இருவரின் இழப்பு மிகவும் வருத்தத்திற்குரியது என்று தூதரகம் குறிப்பிட்டது.
அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்துக்கு அது ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்தது.
(Visited 25 times, 25 visits today)