கலிபோர்னியாவில் விபத்துக்குள்ளான சிறிய விமானம்

சான் டியாகோ பகுதியில் விபத்துக்குள்ளான தனியார் விமானத்தில் இருந்த பலர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானம் மின் கம்பியில் மோதியதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தீயணைப்புத் துறை உதவித் தலைவர் டான் எடி செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
தரையில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
விமானத்தில் எட்டு முதல் 10 பேர் வரை பயணிக்க முடியும் என்றும், ஆனால் எத்தனை பேர் விமானத்தில் இருந்தனர் என்பது இன்னும் தெரியவில்லை என்றும் சான் டியாகோ காவல்துறை மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
“விபத்தால் ஏற்பட்ட தீயினால் தெருவின் இருபுறமும் இருந்த வாகனங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளது” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான விமானம் குறித்த விவரங்களை சான் டியாகோ அதிகாரிகள் வெளியிடவில்லை, ஆனால் அது மிட்வெஸ்டில் இருந்து வந்த விமானம் ஆகும்.