‘இலவசமாகக் கிடைப்பதால் அரிசி வாங்குவதில்லை’ என்று கூறி ஜப்பானிய அமைச்சர் ராஜினாமா

ஆதரவாளர்கள் தமக்கு நிறைய அரிசியை அன்பளிப்பாகக் கொடுப்பதால் அதை வாங்கவேண்டிய அவசியம் இல்லை என்று கூறியதை அடுத்து, ஜப்பானிய வேளாண் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகும்படி கூறப்பட்டது.
வேடிக்கையாக அமைச்சர் டாக்கு இட்டோ சொன்ன வார்த்தை பலருக்குச் சினமூட்டியது.
ஜப்பான் பல ஆண்டுகளில் பார்த்திராத விலைவாசி உயர்வால் ஜப்பானியர்கள் அதிகம் விரும்பும் அரிசியின் விலை கடந்த ஆண்டு இரட்டிப்பானது. இறக்குமதியாகும் அரிசி வகைகளும் குறைந்தன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உள்ளூர் நிதி திரட்டு நிகழ்ச்சியில் கூறிய கருத்துகளுக்கும் இட்டோ மன்னிப்பு கேட்டார்.
இட்டோவிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சிகள் மிரட்டல் விடுத்ததை அடுத்து, அவர் பதவியிலிருந்து விலகினார்.
திரு இட்டோவின் பதவி விலகல் ஏற்கெனவே மக்கள் ஆதரவை இழந்துவரும் பிரதமர் ஷிகெரு இஷிபாவின் சிறுபான்மை அரசாங்கத்தை ஆட்டங்காணச் செய்துள்ளது.
அரிசி ஜப்பானில் ஒரு சக்திவாய்ந்த விவகாரம். அரிசித் தட்டுப்பாடு இதற்குமுன் அரசியல் ரீதியான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
1918ஆம் ஆண்டு அதிகரித்த அரிசி விலைகள் அரசாங்கம் கவிழவும் காரணமாக அமைந்தது.