IPL Match 63 – டெல்லியை வீழ்த்தி Playoff சுற்றுக்கு முன்னேறிய மும்பை

ஐ.பி.எல். தொடரின் 63வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 43 பந்தில் 73 ரன்னும், நமன் திர் 8 பந்தில் 24 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. மும்பை அணியின் துல்லியமான பந்து வீச்சால் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
அதிகபட்சமாக சமீர் ரிஸ்வி 39 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர்.
இறுதியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18.2 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
இதன்மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றதுடன், பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது.