இலங்கை: கெஹெலியவுக்கு விளக்கமறியல்

ஊழல் தொடர்பான மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் ஜுன் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.
இந்த வழக்குகளில் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவை சந்தேக நபராகப் பெயரிடவும் நீதிமன்றம் அனுமதித்தது.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களைப் பரிசீலித்த பின்னர் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்
(Visited 3 times, 3 visits today)