நாளை இலங்கைக்கு கொண்டுவரப்படும் ஒரு தொகை உப்பு!

தொழில்துறைகளுக்காக இறக்குமதி செய்யப்பட்ட 30,000 மெட்ரிக் டன் உப்புத் தொகை நாளை இலங்கையை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 15 ஆம் திகதியிலிருந்து ஹம்பாந்தோட்டை, ஆனையிறவு மற்றும் புத்தளம் உள்ளிட்ட உப்பளங்களில் போதிய உற்பத்தியைப் பெற முடியாததால், நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஒரு கிலோ உப்பின் விலை 400 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
புத்தளம் உப்பு நிறுவனத்தைக் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹதுன்நெத்தி நேற்று பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 2 visits today)