IPL Match 61 – ஐதராபாத் அணிக்கு 206 ஓட்டங்கள் இலக்கு

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் 61வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ் – மார்க்ரம் ஆகியோர் களமிறங்கினர்.
இருவரும் சிறப்பாக விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது.
சிறிது நேரத்திலேயே சிறப்பாக ஆடி வந்த மார்க்ரம் 61 ரன்களில் ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆயூஷ் பதோனி 3 ரன்களில் அவுட்டானார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னோ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்துள்ளது. கடைசி பந்தில் ஆகாஷ் தீப் சிக்சர் அடித்து அணி 200 ரன்களை எட்ட உதவினார்.
இதனையடுத்து 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி ஐதராபாத் களமிறங்க உள்ளது.