ஜெர்மனியில் கடுமையாகும் புதிய சட்டம் – அரச உதவிப்பணம் பெறுபோருக்கு எச்சரிக்கை

ஜெர்மனியின் புதிய அரசாங்கம், வேலை செய்ய மறுக்கும் மக்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
அவர்கள் தற்போது வழங்கப்படும் குடிமக்களின் வருமான உதவியை மாற்றி, மிகவும் கடுமையான விதிகளை கொண்ட ஒரு புதிய உதவித் திட்டத்தை கொண்டு வர விரும்புகிறார்கள்.
இந்த புதிய திட்டத்தின் கீழ், ஒரே வேலை வாய்ப்பை பல முறை நிராகரிக்கும் நபர்களுக்கு எதிராக பல்வேறு தடைகள் விதிக்கப்படும்.
சிலவேளைகளில் அவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் இதன்மூலம் நிறுத்தப்படலாம்.
இந்நிலையில், இதுபோன்ற கடுமையான விதிமுறைகள் அரசியலமைப்பு விதிகளை மீறக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
2019 ஆம் ஆண்டில், ஜெர்மனியின் உச்ச நீதிமன்றம், சலுகைகளை அதிகளவில் குறைப்பது நியாயமற்றது என தீர்ப்பளித்தது.
ஒருவரின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல் அவரை ஆபத்தில் தள்ள முடியாது என மன்று சுட்டிக்காட்டியிருந்தது.
இதன்படி, 30 சதவீதத்துக்கும் அதிகமான சலுகை நீக்கங்கள் சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
எனவே, சட்டத்தின் அடிப்படியில் இந்த விதிகளைப் புறக்கணிக்கும் திட்டங்களை செயற்படுத்துவது சாத்தியமில்லை.
இந்நிலையில், புதிய அரசாங்கத்தின் சலுகை நீக்க திட்டம், நடைமுறையில் சாத்தியமில்லை எனவும் இதனால் பெரிய சட்ட சிக்கல்களை அரசாங்கம் எதிர்கொள்ளக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.