இலங்கை சென்றவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

இலங்கை விமானப் பயணி ஒருவர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
ஏழரை மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு சென்றவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் கண்டி, கம்பளை பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய தொழிலதிபர் ஆவார்.
அவர் இந்த சிகரெட்டுகளை டுபாயில் கொள்வனவு செய்து, பஹ்ரைனுக்குப் பயணம் செய்து, அங்கிருந்து கல்ப் ஏர் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவர் எடுத்துச் வந்த நான்கு சூட்கேஸ்களில் 50,000 வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகள் அடங்கிய 250 சிகரெட் அட்டைப்பெட்டிகளை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அதிகாரிகள் அவரைக் காவலில் எடுத்து, இந்த விவகாரம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நெத் நியூஸ் செய்தியாளர் தெரிவித்தார்.