பிரித்தானியாவில் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

பிரித்தானியாவின் சவுத் என்டில் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவுகூரப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் சவுத்என்டில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 16வருடத்தினை நினைவுகூர்ந்துள்ளனர்.
நேற்று மாலை கடற்கரையோரம் கூடிய மக்கள் 16 வருடங்களிற்கு முன்னர் முள்ளிவாய்;க்கால் இனப்படுகொலையில் அழிக்கப்பட்ட தங்கள் உறவுகளை நினைவுகூர்ந்தனர்.
சூபரிஈஸ்ட் கடற்கரையோரத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், தமிழ் மக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர் நினைவுரைகளும் நிகழ்த்தப்பட்டன,பாடல்கள் பாடப்பட்டன கவிதைகளும் வாசிக்கப்பட்டன. இதன் பின்னர் நூற்றுக்கணக்கான மிதக்கும் விளக்குகள் கடலில் விடப்பட்டன.
நினைவேந்தல் நிகழ்வின் போது முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது.
(Visited 6 times, 6 visits today)