ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படவிருந்தவரால் காத்திருந்த அதிர்ச்சி

ஆஸ்திரேலிய எல்லைப் படை அதிகாரியைத் தாக்கி தப்பியோடிய கைதி குறித்து பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சிட்னி விமான நிலையத்திலிருந்து நாடுகடத்தலுக்காக கொண்டு செல்லப்பட்ட 28 வயது டோங்கா நாட்டவர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் அவர் மீது வன்முறை குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை, ஆனால் விசா காலாவதியானதைத் தொடர்ந்து அங்கு தங்கியிருந்ததற்காக நாடு கடத்தப்பட்டார்.
சந்தேக நபர் சிட்னியின் மேற்கில் 54 வயதுடைய ஒருவரின் கழுத்து மற்றும் கன்னத்தில் கத்தியால் குத்தியதாகவும், 36 வயதுடைய ஒருவரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
நாடு கடத்துவதற்காக சிட்னி விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அந்த இளைஞன் வில்லாவுட் தடுப்பு மையத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தின் காரணமாக, மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து கைதிகளின் போக்குவரத்தையும் நிறுத்தி வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.