இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்த பாகிஸ்தான் பிரதமர்

இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் படுகொலைகளைத் தொடர்ந்து சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே, தங்கள் நாட்டுக்குள் நெருக்கடி அதிகரிக்கும் என்பதால் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என மத்திய அரசுக்கு பாகிஸ்தான் நீர்வள அமைச்சகம் கடிதம் எழுதியது.
இந்தச் சூழ்நிலையில்தான் காஷ்மீர் விவகாரம், நதி நீர் பங்கீடு குறித்து பேச வருமாறு ஷெஹ்பாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)