காசா நகரில் தஞ்சம் புகுந்த பாலஸ்தீனியர்களை வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவு

காஸாவில் உள்ள குடியிருப்பாளர்களை இதுவரை இல்லாத வகையில் இஸ்ரேல் வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது.
வெடிகுண்டுகளால் ஏற்கெனவே பாதி தகர்க்கப்பட்ட காஸா நகரைப் பாதுகாப்பற்ற இடமாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. கடுமையான தாக்குதலுக்குமுன் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடும்படி இஸ்ரேலியத் தற்காப்புப் படைகள் குடியிருப்பாளர்களிடம் அறிவுறுத்தின.
இஸ்ரேலிய ராணுவம் குறிப்பிட்ட கட்டடங்களில் இஸ்லாமியப் பல்கலைக்கழகம், அல்-ஷிஃபா மருத்துவமனை, மூன்று முன்னாள் பள்ளிக்கூடங்கள் ஆகியவை அடங்கும்.
ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்ட அந்தக் கட்டடங்களைத் தளபத்திய, கட்டுப்பாட்டு நிலையங்களாகப் பயன்படுத்துவதாய் இஸ்ரேல் குறைகூறினாலும் உள்ளூர் அதிகாரிகளும் உதவி அமைப்புகளும் அங்கு ஆயிரக்கணக்கான குடிமக்கள் தஞ்சமடைந்திருப்பதாகக் குறிப்பிட்டன.
கட்டடங்களிலிருந்து வெளியேறுவதற்கு அதிக நேரம் பிடிக்கும் என்ற அந்த அமைப்புகள், அதிகளவில் உயிர்சேதம் ஏற்படும் என்றன.
காஸாவிலிருந்து குடியிருப்பாளர்களை வெளியேற்ற முயல்வது இஸ்ரேல் அதன் ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.அத்தகைய நடவடிக்கையை எதிர்த்து குரல் கொடுத்த வெகு சில மூத்த இஸ்ரேலியர்களில் முன்னாள் பிரதமர் எஹுட் ஒல்மெர்ட்டும் ஒருவர்.
“பெரும்பாலான இஸ்ரேலியர்கள், குறிப்பாக பெரும்பாலான ராணுவத் தளபதிகள் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக உள்ளனர். அவர்கள் போரை இப்போதே முடிவுக்குக் கொண்டுவர விரும்புகின்றனர்,” என்று திரு ஒல்மார்ட் சொன்னார்.
பிரெஞ்சு அதிபர் இமேனுவல் மெக்ரோனும் காஸாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் நடவடிக்கை வெட்கக்கேடானது என்று சாடினார்.அதற்குத் மெக்ரோன் ஹமாஸ் பக்கம் நிற்பதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு குறைகூறினார்.
கடந்த புதன்கிழமை, விரிவான உடன்பாட்டை எட்டும்படி 67 முன்னாள் பிணையாளிகள் கையெழுத்திட்ட கடிதத்தைத் நெட்டன்யாஹுவிடம் கொடுத்தனர்.