இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவை அனுமதிக்கும் சீனா!

பிராந்தியத்துடனான நெருக்கமான தொடர்புகளை அதிகரிக்க, ஐந்து லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு ஒரு வருடத்திற்கு விசா இல்லாத நுழைவை சீனா அனுமதிக்கிறது.
ஜூன் 1 முதல், பிரேசில், அர்ஜென்டினா, சிலி, பெரு மற்றும் உருகுவே ஆகிய நாடுகளின் குடிமக்கள் விசா இல்லாமல் 30 நாட்கள் வரை சீனாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த சோதனைத் திட்டம் ஒரு வருடத்திற்கு அமலில் இருக்கும். சீனாவிற்கு வருகை தரும் வெளிநாட்டு நண்பர்களை நாங்கள் வரவேற்கிறோம்” என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தினசரி மாநாட்டில் தெரிவித்தார்.
அமெரிக்காவின் செல்வாக்கிற்கு எதிரான ஒரு எதிர் எடையாக, பிராந்தியத்தில் அதன் கூட்டணிகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
இதேவேளை சீனாவும் உஸ்பெகிஸ்தானும் ஜூன் 1 முதல் 30 நாட்கள் வரை பரஸ்பர விசா இல்லாத நுழைவைத் தொடங்கும் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.