சொகுசு விமானம் டிரம்ப்பிற்கான தனிப்பட்ட அன்பளிப்பு அல்ல – கட்டார் பிரதமர் அறிவிப்பு

அமெரிக்காவிற்கு வழங்கப்படும் சொகுசு விமானம் டிரம்ப்பிற்கான தனிப்பட்ட அன்பளிப்பு அல்ல என்று கட்டார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜசிம் அல்-தானி தெரிவித்துள்ளார்.
அது இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையிலான பரிமாற்றம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டார் அன்பளிப்பு கொடுத்து டிரம்ப்பை தனது வசம் இழுக்கிறது என்ற குற்றச்சாட்டை அவர் நிராகரித்தார்.
அமெரிக்க நட்பு நாடுகளின் பிரச்சினைகளைத் தீர்க்க கட்டார் உதவுவதாக அவர் கூறியுள்ளார். கட்டார் என்றுமே அமெரிக்காவிற்கு ஆதரவு அளித்திருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சொகுசு விமான அன்பளிப்பு இன்னும் சட்டரீதியாக ஆராயப்படுகிறது என்று அவர் பகிர்ந்தார். இதுபோன்ற அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அது முட்டாள்தனம் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் வெளிநாட்டு அரசாங்கத்திடமிருந்து விலையுயர்ந்த பொருளை அன்பளிப்பாகப் பெறுவது குறித்துப் பாதுகாப்பு அக்கறைகள் எழுந்துள்ளன.