இலங்கை: 2 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயினுடன் ஒருவர் கைது

கஹதுடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோனபொல பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது 2 கிலோகிராம் 2 கிராம் ஹெராயின் வைத்திருந்ததற்காக இரண்டு சந்தேக நபர்களை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (PNB) கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபர்கள், 39 மற்றும் 46 வயதுடைய கோனபொல மற்றும் குபுகவத்த பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (PNB) மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
(Visited 1 times, 1 visits today)