பிரித்தானியாவில் உள்ள பிரபல பாடசாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பிரித்தானியாவில் உள்ள வில்ட்ஷயர் மேல்நிலைப் பள்ளியில் வெடி குண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து வில்ட்ஷயர் காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த மேல்நிலை பள்ளியில் இருந்து மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஸ்விண்டனில் உள்ள லிடியார்ட் பார்க் அகாடமி, குழந்தைகளையும் ஊழியர்களையும் பள்ளி மைதானத்தின் பின்புறத்திற்கு அனுப்பி, கட்டிடத்திலிருந்து முடிந்தவரை தொலைவில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்து செல்ல வாயிற் கதவின் அருகே காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
லிடியார்ட் பார்க் அகாடமிக்கு வெடிகுண்டு மிரட்டல் இன்று காலை மின்னஞ்சல் வழியாக வந்தது.
மாணவர்கள் மைதானத்திற்குள் ஓடச் சொல்வதற்கு முன்பு காலை 9 மணியளவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.