இலங்கையில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்கள் பரவும் அபாயம் தீவிரம்

இலங்கையில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தானசாலைகளின் பின்னரான காலப்பகுதியில் இந்த அபாயம் அதிகமாக உள்ளது.
விசாக பூரணையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலும் தானசாலைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
தானசாலைகள் நடத்தப்பட்ட பின்னர், வீசப்படும் கழிவுகளால் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா பரவும் அபாயம் உள்ளதால், தானசாலைகளை ஏற்பாடு செய்தவர்கள் இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
இதேவேளை எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.
(Visited 19 times, 1 visits today)