பிரித்தானியாவில் குடியுரிமை பெற காத்திருப்பவர்களுக்கு கடுமையாகும் சட்டம் – பிரதமர் அறிவிப்பு

பிரித்தானியாவில் குடியேற்ற அளவு கணிசமாகக் குறைக்கப்படும் என பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உறுதியளித்துள்ளார்.
திங்கட்கிழமை காலை ஒரு செய்தியாளர் கூட்டத்தில், நிகர இடம்பெயர்வைக் குறைப்பதற்கான தொழிற்கட்சியின் விரிவான திட்டத்தை பிரதமர் வெளியிட்டுள்ளார்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, வெளிநாட்டு தொழிலாளர்கள் கடுமையான விசா கட்டுப்பாடுகளை எதிர்கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியாவில் குடியுரிமை பெற இனிமேல் 10 வருடங்கள் காத்திருக்க வேண்டுமென பிரதமர் அறிவித்துள்ளார்.
குடியேற்றவாசிகள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் முன், அவர்கள் ஒரு தசாப்தம் வரை பிரித்தானியாவில் செலவிட வேண்டும்.
மேலும் ஆங்கில மொழித் தேவைகள் அதிகரிக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை காலமும் 5 வருடங்களில் குடியுரிமை வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.