உலகம்

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்: புதிய போப் லியோ வரவேற்பு

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு போப் 14-ம் லியோ வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரஷ்யா-உக்ரைன் போரையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி காலமானார். இதையடுத்து, புதிய போப் ஆக ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் கடந்த 8-ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் போப் 14-ம் லியோ என அழைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், போப் ஆக பொறுப்பேற்றுக் கொண்ட அவர், முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமையான நேற்று செயின்ட் பீட்டர்ஸ் பசிலிகாவில் தோன்றி உரையாற்றினார். அப்போது உலகம் முழுவதும் உள்ள தாய்மார்களுக்கு அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு போப் 14-ம் லியோ வரவேற்பு தெரிவித்தார். பேச்சுவார்த்தைகள் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். இதுபோல ரஷ்யா, உக்ரைன் இடையிலான போரையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள இஸ்ரேலியர்களை காஸா நிர்வாகத்தினர் விடுவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!