இலங்கை

மேலதிக விசாரணைகளுக்காக தினேஷ் ஷாப்டரின் சடலத்தை தோண்டியெடுக்க நீதிமன்றம் உத்தரவு!

தினேஷ் ஷாப்டரின் சடலத்தை மேலதிக விசாரணைகளுக்காக விசேட பொலிஸ் பாதுகாப்பில் தோண்டி எடுக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்திர ஜயசூரிய நேற்று (19) குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் 5 பேர் அடங்கிய விசேட வைத்தியக் குழு, சடலத்தை மீட்கும்போது, அங்கிருக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் பயண வசதிகள், தங்குமிட வசதிகள் மற்றும் உள்ளூர் நலன்கள் அனைத்தையும் மேற்கொள்ளுமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு மற்றுமொரு உத்தரவை நீதிவான் பிறப்பித்துள்ளார்.

இதன்போது தினேஷ் ஷாஃப்டரின் மரணத்துக்கான காரணத்தை கண்டறிய அவரது உடலை தோண்டி எடுக்க வேண்டியது அவசியம் என 5 பேர் கொண்ட கொழும்பு சிறப்பு மருத்துவ சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 7 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்