நிபந்தனையற்ற 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ரஷ்யாவிற்கு அழைப்பு : எச்சரிக்கும் ஐரோப்பிய தலைவர்கள்!

உக்ரைன் மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் மே 12 முதல் நிபந்தனையற்ற 30 நாள் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ஆதரவுடன் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்த திட்டத்திற்கு ரஷ்யா இணங்க தவறினால் புதிய “பாரிய” தடைகள் விதிக்கப்படும் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த அறிவிப்பை பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து மற்றும் உக்ரைன் தலைவர்கள் கியேவில் நடந்த ஒரு கூட்டத்திற்குப் பிறகு தெரிவித்துள்ளனர்.
30 நாள் போர் நிறுத்தத்திற்கு “அமெரிக்காவுடன் சேர்ந்து இங்குள்ள அனைவரும் புடினுக்கு அழைப்பு விடுக்கிறோம்” என்று பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.
(Visited 1 times, 1 visits today)