இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தம் – அமெரிக்கா தலையீடு

அமெரிக்காவின் தலையீட்டின் காரணமாக பாகிஸ்தானும், இந்தியாவும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் போர் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான போரை நிறுத்துவதற்கு இணங்கியுள்ளதாக பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் டார் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதாக இந்தியாவும் அறிவித்துள்ளது.
இதேவேளை “அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் நடந்த நீண்ட இரவுப் பேச்சுவார்த்தைகளின்” விளைவாக இந்த போர் நிறுத்தம் ஏற்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
(Visited 2 times, 3 visits today)