இந்தியாவின் விமானப்படைத் தளங்களை தாக்க பாகிஸ்தான் முயற்சி

இந்தியாவின் பஞ்சாபில் அமைந்துள்ள விமானப்படை தளங்களை தாக்குவதற்கு பாகிஸ்தான் முயற்சி செய்வதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் கர்னல் சோஃபியா குரேஷி ஆகியோர் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தான் இந்தியாவில் 26 இடங்களில் தாக்குதல் நடத்தியதாகவும், பாகிஸ்தான் இராணுவம் தனது துருப்புக்களை எல்லைப் பகுதிகளுக்கு நகர்த்தத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் உள்ள இலக்குகளை நோக்கி பாகிஸ்தான் தொடர்ச்சியாக ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியதை அடுத்து, இந்தியா பதிலடி தாக்குதல்களைத் தொடங்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
(Visited 1 times, 1 visits today)