தொடரும் பதற்றம் – டெல்லி விமான நிலையத்தில் 2 நாட்களில் 228 விமானங்கள் இரத்து
டெல்லி விமான நிலையத்தில் 2 நாட்களில் 228 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் சேவையில் ஈடுபடவிருந்த 288 விமானங்கள், கடந்த இரண்டு நாட்களில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றநிலையை தொடர்ந்து இவ்வாறு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், லே, சண்டிகர், பிகானீர், ஜோத்பூர், கிஷன்கர் மற்றும் ராஜ்கோட்டிற்கு செல்லும் அனைத்து விமானங்களையும் இன்று நள்ளிரவு வரை நிறுத்தி வைப்பதாக இந்தியாவின் இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.





