இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் – அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை
பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவி வரும்நிலையில், பாகிஸ்தானின் லாகூரில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேறுமாறு அல்லது பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
பஹல்காம் தாக்குதலையடுத்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை என்ற பெயரில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால், இரு நாட்டு எல்லையிலும் போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. மேலும், இரு நாடுகளும் போர்ப் பதற்றத்தைத் தணித்து, அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
(Visited 31 times, 1 visits today)





