இலங்கை விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகாப்டர் ஒன்று இன்று (09) காலை விபத்துக்குள்ளானது.
இலங்கை விமானப்படையின் 7 ஆம் இலக்க படைப்பிரிவுக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது.
அணிவகுப்பின் போது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த ஹெலிகாப்டரில் இரண்டு விமானிகள் உட்பட 12 பேர் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹெலிகாப்டர் மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், இதுவரை சுமார் 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
(Visited 73 times, 1 visits today)