பாகிஸ்தானுக்கு செல்லும் சிங்கப்பூர் நாட்டினருக்கு விசேட அறிவிப்பு

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலை அதிகரித்து வருகின்றமையினால் பாகிஸ்தானுக்கான அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களையும் தவிர்க்குமாறு சிங்கப்பூர் அரசாங்கம் தனது குடிமக்களுக்கு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சினால் நேற்றையதினம் வெளியிடப்பட்ட பாதுகாப்பு ஆலோசனை அறிக்கையில் ,பாகிஸ்தான் எல்லை பகுதிக்குள் பிரவேசிக்கும் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
அத்தோடு, பாகிஸ்தானில் உள்ள சிங்கப்பூர் பிரஜைகள் பொது கூட்டங்களைத் தவிர்க்குமாறும், உள்நாட்டு அதிகாரிகளின் ஆலோசனைகளை பின்பற்றுவதுடன், தனிப்பட்ட பாதுகாப்பிற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 2 times, 2 visits today)