இந்தியா

பாகிஸ்தானில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் – மலையில் தஞ்சம்

பாகிஸ்​தானில் உள்ள 4 இடங்​கள் மற்​றும் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 இடங்​களில் உள்ள தீவிர​வாத முகாம்​கள் மீது இந்​திய பாது​காப்​புப் படை நேற்று அதி​காலை​யில் தாக்​குதல் நடத்​தி​யது.

அப்​போது வீடு​களை விட்டு வெளி​யேறி பாது​காப்​பான இடங்​களில் தஞ்​சம் அடை​யு​மாறு முஸாப​ரா​பாத் பகு​தி​யில் உள்ள மசூதி ஒலிபெருக்​கி​கள் மூலம் தகவல் தெரிவிக்​கப்​பட்​ட​தாக உள்​ளூர்​வாசிகள் தெரி​வித்​தனர்.

“வெடி சத்​தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்​தோம். அப்​போது மீண்​டும் குண்டு வெடித்​தது. இதனால் அச்​சமடைந்த நாங்​கள், குழந்​தைகளு​டன் வீட்​டை​விட்​டு வெளியேறி மலைப்பகுதிக்குச் சென்றோம்” என முகமது ஷைர் மிர் என்பவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, ‘எக்​ஸ்’ தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:

நமது ஆயுதப் படைகள் குறித்து பெருமை கொள்​கிறேன். பஹல்​காமில் நமது அப்​பாவி சகோ​தரர்​களை கொடூர​மாக கொன்​றதற்​கான பாரதத்​தின் பதிலடி​தான் ஆபரேஷன் சிந்​தூர். இந்​தியா மற்​றும் அதன் மக்​கள் மீது நடத்​தப்​படும் எந்​தவொரு தாக்​குதலுக்​கும் தக்க பதிலடி கொடுக்க மோடி அரசு உறு​திபூண்​டுள்​ளது. தீவிர​வாதத்தை வேருடன் ஒழிப்​ப​தில் பாரதம் உறு​தி​யாக உள்​ளது. இவ்​வாறு அமித் ஷா கூறி​யுள்​ளார்​.

(Visited 44 times, 1 visits today)

SR

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!