ஆபரேஷன் சிந்தூர் – பாராட்டுகளை தெரிவித்த தமிழ் திரை பிரபலங்கள்
ஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தால் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பயங்கரவாதிகளை ஒழிக்கும் நோக்கம் நிறைவேறும் வரை சண்டை ஓயாது. பிரதமர் மோடியுடன் நாட்டு மக்கள் அனைவரும் துணை நிற்பதாக தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு இசையமைப்பாளர் இளையராஜா பாரட்டுகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர்,”மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரை தொடர்ந்து, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக பதிவு வெளியிட்டுள்ளார்.
மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவத்தின் முகம். ஜெய்ஹிந்த் என்று குறிப்பிட்டுளளார்.





