பாடல் காப்புரிமை விவகாரம் – ஏ.ஆர். ரஹ்மான் அபராதம் செலுத்த இடைக்கால தடை

பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற ‘வீரா ராஜ வீரா’பாடல் காப்புரிமை வழக்கில் ஏ.ஆர். ரஹ்மான் 2 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என விதிக்கப்பட்ட உத்தரவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
முன்னதாக, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பயன்படுத்திய ‘வீரா ராஜ வீரா’ பாடலின் இசை தாகருக்கு சொந்தமானது என படக்குழு தரப்பு ஒப்புக்கொண்டதால் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ரூ.2 கோடியை நீதிமன்ற பதிவாளரிடமும், ரூ .2 லட்சத்தை தாகர் பெயரிலும் டெபாசிட் செய்யவும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து, இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மேல்முறையீட்டு மனுவை ஏற்று ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால உத்தரவிற்கு தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஹரிசங்கர் தலைமையிலான டிவிஷன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.