சீனாவில் சுற்றுலா படகு கவிழந்து விபத்து – 70 பேர் வைத்தியசாலையில் அனுமதி, 10 பேர் பலி!

தென்மேற்கு சீனாவில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குய்சோவில் உள்ள கியான்சி நகரில் உள்ள ஆற்றில் திடீரென வீசிய காற்றால் படகு கவிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் 84 பேர் தண்ணீரில் விழுந்ததாகவும், அவர்களில் 70 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், நால்வர் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சீனா தனது வார கால மே தின விடுமுறையின் இறுதியை கொண்டாடியபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது,
சீனத் தலைவர் ஜி ஜின்பிங் முன்னதாக தேடல் மற்றும் மீட்புப் பணிகளில் “முழு முயற்சிகளையும்” வலியுறுத்தியுள்ளார்.
(Visited 1 times, 1 visits today)