இஸ்ரேலுக்கான விமான சேவைகளை நிறுத்திய ஏர் இந்தியா நிறுவனம்!

இஸ்ரேலின் முக்கிய சர்வதேச விமான நிலையத்தில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, டெல் அவிவ்வுக்கான விமானங்களை மே 6 ஆம் திகதி வரை நிறுத்தி வைத்துள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
“எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, டெல் அவிவ்வுக்கான மற்றும் அங்கிருந்து புறப்படும் எங்கள் நடவடிக்கைகள் மே 6, 2025 வரை உடனடியாக நிறுத்தி வைக்கப்படும்” என்று விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)