TikTokஇல் பரவும் ஆபத்தான சவால் – உயிரை பறிக்கும் என எச்சரிக்கை

சமூக ஊடகங்களில் waterboarding சவால் ஆபத்தான கட்டத்தில் உள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பலர் அவர்களின் முகங்களைத் துணியை வைத்து மூடி வாளி நிறையத் தண்ணீரைத் தங்களின் மேல் கொட்டிக்கொள்கின்றனர். அதைக் காணொளியாக எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்கின்றனர்.
இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிர் இழக்க நேரிடலாம். இது சமூக ஊடகங்களில் பரவிவருகின்றமை குறித்து பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதைச் செய்து TikTok ஊடகத்தில் காணொளியைப் பதிவு செய்த ஒருவர், “நான் கிட்டத்தட்ட இறந்திருப்பேன்,” என்று கூறினார்.
எப்படி ஒருவரால் இவ்வாறு செய்ய முடிகிறது? இது குறித்து பெற்றோர் அவதானம் செலுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒருவருக்கு மூழ்குவது, மூச்சுத்திணறல் ஏற்படுவது போன்ற உணர்வைத் தரும் இந்த சித்திரவதை முறை உலகெங்கும் தடை செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்கா தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இதை எதிரிகளிடம் பயன்படுத்தியிருக்கிறது.