இலங்கை சந்தையில் மீண்டும் உயரும் முட்டை விலை – 40 ரூபாயாக அதிகரிப்பு

இலங்கை சந்தையில் முட்டை விலை மீண்டும் உயரும் போக்கு இருப்பதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த வாரம் 25 ரூபாய்க்கும் குறைவாக இருந்த முட்டையின் மொத்த விலை, தற்போது 40 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் அஜித் குணசேகர முட்டை பற்றாக்குறை ஏற்படும் அபாயம் குறித்து எச்சரித்தார்.
உலக சந்தையின் சூழ்நிலையால் முட்டை விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
“பறவை காய்ச்சல் தொற்றுநோய் காரணமாக இந்திய முட்டைகளுக்கான உலகளாவிய தேவை அதிகரித்துள்ளது. இது இலங்கைக்கு இந்தியாவில் இருந்து நியாயமான விலையில் முட்டைகளை இறக்குமதி செய்வதை சவாலாக மாற்றும். இந்தியாவில் நிச்சயமற்ற விநியோகம் மற்றும் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் போது அதிகரித்த போக்குவரத்து செலவுகள் இதற்குக் காரணம்,” என்று அவர் கூறினார்.
முட்டைகள் மீது விதிக்கப்பட்ட VAT வரியால் தொழில் நெருக்கடியை எதிர்கொள்கிறது என்று குணசேகரன் கூறுகிறார்.
இந்த வரிச்சுமை உற்பத்தி செலவை அதிகரித்துள்ளது, இதனால் முட்டை விலைகள் நுகர்வோரால் தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளன.
“வாட் வரி தொழில்துறைக்கு கடுமையான அடியாக இருந்தது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், வரிச்சுமை காரணமாக அதிக செலவுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.