இலங்கை முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்துவை கொலை செய்ய சதி?
இலங்கை முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்துவை கொலை செய்ய சதி?முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை கொலை செய்வதற்கான திட்டம் ஒன்று தீட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக தேசபந்து தென்னகோனுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் குழு உறுப்பினருமான கஞ்சிபானை இம்ரான் இதற்கான திட்டத்தை தீட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
தேசபந்து தென்னகோன், காவல்துறை மா அதிபராக கடமையாற்றிய போது, போதைப் பொருட்களை ஒழிப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
(Visited 35 times, 1 visits today)





