ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட்டு 4700 வடகொரிய வீரர்கள் பலி

உக்ரைன் -ரஷ்யா இடையேயான போரானது மூன்று ஆண்டுக்கும் மேல் தொடங்கி நடந்து வருகின்றது.
ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் சில பகுதிகளை மீண்டும் கைப்பற்றுவதற்காக ரஷ்யாவுக்கு உதவுவதற்காக வடகொரியா தனது வீரர்களை அனுப்பியதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் உறுதிப்படுத்தி இருந்தது.
இந்நிலையில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட்டதில் வடகொரிய வீரர்கள் 4700 பேர் உயிரிழந்தனர் அல்லது காயமடைந்தனர் தென்கொரியா தெரிவித்துள்ளது.
சமீபத்தில் நடந்த தென்கொரியாவின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் தேசிய புலனாய்வு சேவை இந்த தகவலை தெரிவித்துள்ளதாக கூட்டத்தில் கலந்து கொண்ட எம்பி லீ சியாங் குவென் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘‘ரஷ்யா-உக்ரைன் போரில் 600 உயிரிழப்புக்கள் உட்பட 4700 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் காயமடைந்த 2000 வடகொரிய வீரர்கள் விமானம் அல்லது ரயில் மூலமாக வடகொரியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். போரில் இறந்த வடகொரிய வீரர்கள் ரஷ்யாவில் தகனம் செய்யப்பட்டனர். ஜனவரியில் சுமார் 300 வடகொரிய வீரர்கள் இறந்தனர். மேலும் 2700 பேர் காயமடைந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த மாதம் 4000ஆக அதிகரித்துள்ளது” என்றார்.