இலங்கையின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
தென், மேல் மாகாணங்களிலும், புத்தளம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.
மத்திய, ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடனான மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)