அமெரிக்கா – அரிசோனாவில் 2000 ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமித்த காட்டுத்தீ : மக்கள் பலர் வெளியேற்றம்!

அரிசோனாவில் ஏற்பட்ட ஒரு பெரிய காட்டுத்தீ 2,000 ஏக்கர் நிலப்பரப்பை எரித்துள்ளது.
மேலும் அவசர சேவைகள் இப்போது உள்ளூர்வாசிகளை தங்கள் வீடுகளை காலி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளன.
காலை 11:30 மணியளவில் கோச்சிஸிலிருந்து தெற்கே சுமார் 16 மைல் தொலைவில் உள்ள சன்சைட்ஸ்-பியர்ஸ் அருகே தொடங்கிய காட்டுத்தீ இரவு முழுவதும் பற்றி எரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அரிசோனா வனவியல் மற்றும் தீயணைப்பு மேலாண்மைத் துறையின் கூற்றுப்படி, தீயை அணைப்பதற்கு சாதகமான வானிலை இல்லை எனக்கூறப்படுகிறது.
தீப்பிழம்புகள் மேற்கு மற்றும் தெற்குப் பக்கங்களில் உள்ள டிராகூன்ஸ் மற்றும் கொரோனாடோ தேசிய வனப்பகுதிக்குள் நகர்ந்துள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The #StrongholdFire is now estimated at 2k ac. w/no containment to report. The fire has pushed into the Dragoons & @CoronadoNF on west & south sides.
Ground resources remain engaged w/add'l resources on order for Tuesday morning. Aircraft worked the south flank of fire most of… pic.twitter.com/nQHcGX2bOa
— AZ Dept. Forestry and Fire Management (@azstateforestry) April 29, 2025