ஸ்பெயின், போர்ச்சுகல் மின்தடை – படிப்படியாக வழமைக்கு திரும்பும் மின்சாரம்

ஸ்பெயினிலும் போர்ச்சுகலிலும் மின்சாரம் படிப்படியாக வழமைக்கு திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரு நாடுகளிலும் பெரிய அளவிலான மின்தடை ஏற்பட்டது. பொதுப் போக்குவரத்து, மின்படிக்கட்டுகள் உட்பட பல சேவைகள் பாதிக்கப்பட்டன.
தொலைபேசி, இணையத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. தற்போது மின்சார விநியோகம் ஓரளவுக்கு வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டது.
5 விநாடிகளில் சுமார் 15 கிகாவாட்ஸ் மின்சாரம் திடீரென காணாமல்போயுள்ளது. 15 கிகாவாட்ஸ் என்பது அந்தத் தருணத்தில் பயன்பாட்டில் இருந்த மின்சாரத்தில் பாதிக்கும் அதிகமான அளவாகும்.
ஊழியர்கள் சிலர் இன்று வீட்டில் இருக்க வேண்டியிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
(Visited 1 times, 1 visits today)