ChatGPTயைப் பயன்படுத்த ஊழியர்களுக்குக் கட்டுப்பாடு – Apple நிறுவனம் அதிரடி
Apple நிறுவனம் அதன் ஊழியர்களுக்குக் கட்டுப்பாடு விதித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ChatGPTயைப் பயன்படுத்தவே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதே போன்றதொரு தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் Apple நிறுவனம் இருப்பதே அதற்குக் காரணம் என குறிப்பிடப்படுகின்றது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் வாயிலாக நிறுவனத்தின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்துவிடும் என்ற கவலை Appleஉக்கு இருக்கிறது.
அதனால் Microsoft நிறுவனத்தின் Copilot செயலியையும் பயன்படுத்த வேண்டாம் என நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மென்பொருள் குறியீட்டை உருவாக்கச் செயலி பயன்படுத்தப்படுவதாக அந்தத் தகவல் கூறுகிறது. ChatGPTயைத் தயாரித்த OpenAI நிறுவனம் கடந்த வாரம் ‘inkognito’ அம்சத்தை அறிமுகப்படுத்தியது.
அந்த அம்சம் இருந்தால், ChatGPTஇல் பயனீட்டாளர்கள் மேற்கொள்ளும் உரையாடல்களின் பதிவுகளைத் தரவுகளாக வைத்துக்கொள்ள முடியாது.