புளோரிடாவில் 45 பயணிகளுடன் விபத்தில் சிக்கிய படகு : பலர் படுகாயம்!

புளோரிடாவின் கிளியர்வாட்டர் நகரில் நடந்த படகு விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு பணியாளர்கள் உட்பட 45 பேருடன் பயணித்த படகு இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சட்ட அமலாக்க நிறுவனத்தால் படகு அடையாளம் காணப்பட்டு விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
காயமடைந்தவர்களில் இருவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கடலோர காவல்படையின் உதவியுடன் புளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையம் விபத்து தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)