விமானியின் அறையில் நுழைந்த புகை : அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

இங்கிலாந்துக்குச் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் திடீரென புகை நிரம்பியதால் குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
லண்டன் ஹீத்ரோவுக்குச் செல்லும் வழியில் வர்ஜீனியாவில் உள்ள டல்லஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து போயிங் 777 விமானம் புறப்பட்டபோது, அதன் இயந்திரத்தில் பறவை மோதியதால், கேபினுக்குள் புகை வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து குறித்த விமானம் பாஸ்டன் லோகன் சர்வதேச விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது, அங்கு உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணியளவில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
வாடிக்கையாளர்களின் பயணங்களில் ஏற்பட்ட தாமதங்களுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் மன்னிப்பு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 3 times, 3 visits today)