கனடாவில் கார் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கனடாவின் வான்கூவரில் நடந்த தெரு விழாவின் போது ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், காரை ஓட்டி வந்த 30 வயது நபர் மீது கொலைக் குற்றச்சாட்டின் பேரில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வான்கூவரில் பிலிப்பைன்ஸ் கலாச்சாரத்தைக் கொண்டாடும் ஒரு விழாவில் கூடியிருந்த கூட்டத்திற்குள் சந்தேக நபர் தனது காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தினார்.
சனிக்கிழமை இரவு நடந்த இந்த சம்பவத்தில் இறந்த 11 பேரின் அடையாளங்களை கனேடிய அதிகாரிகள் வெளியிடவில்லை.
இந்த நடவடிக்கை பயங்கரவாதச் செயல் அல்ல என்று கனேடிய பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
(Visited 22 times, 1 visits today)