IPL Match 45 – 54 ஓட்டங்களால் மும்பை அணி வெற்றி

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 45வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் இன்று மோதியது.
போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
ரியான் ரிக்கல்டன் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார்.
20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு மும்பை இந்தியன்ஸ் அணி 215 ரன்கள் குவித்தது. லக்னோ அணி 216 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங்கை தொடங்கியது.
இந்நிலையில் 19 ஆவது ஓவரில் லக்னோ அணி 161 ரன்களில் 10 விக்கட்டையும் இழந்து சுருண்டது. 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
(Visited 4 times, 1 visits today)