சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வெளியான தகவல்
சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து ஏதேனும் புகார் இருப்பின் அறிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
FAST குழு அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவிக்கலாம் என MOM தெரிவித்துள்ளது.
அனைத்து விடுதிகளிலும் சோதனை கண்காணிப்பு தொடர்ந்து வழக்கம்போல நடைபெறுவதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறினார்.
விடுதிகளில் உள்ள சமையலறை சுத்தம் மற்றும் ஒழுங்குமுறை சரியாக உள்ளதா என்பதையும் கண்காணிப்பதாக அவர் கூறினார்.
வெளி இடங்களில் இருந்து உணவுகளை வாங்கும்போது முறையாக உரிமம் பெற்ற இடங்களில் இருந்து மட்டுமே விடுதி உரிமையாளர்கள் வாங்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளியில் இருந்து வரும் உணவுகள் ஊழியர் கையில் வந்து சேரும் வரை அவைகள் முறையாக கையாளப்படுகிறதா என்பதும் முறையாக கண்காணிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பின்பற்றதாக விடுதிகளுக்கு எச்சரிக்கையும், மேலும் விதிமுறைகளுக்கு எதிராக செயல்படும் உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
இது குறித்து ஊழியர்கள் தைரியமாக புகார் அளிக்கலாம். Forward Assurance Support Team (FAST) என்ற மனிதவள அமைச்சகத்தின் குழுவிடம் புகார் அளிக்கும்படியும் அவர் பரிந்துரை செய்தார்.